சான்றிதழ்க் கல்விக்கான அனைத்துப் பாடங்களும் இணையவழிப் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்திக் கற்பதற்கு எளிய, முறையில், ஆர்வம் ஊட்டும் வகையில் வழங்கப்படுகின்றன. இப்பாடங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சான்றிதழ்க் கல்வி
BB00 அடிப்படை நிலை
எழுத்துகள் அறிமுகம், சொற்களைக் கற்றல், சிறு தொடர் கற்றல், எழுதும் பயிற்சி, மழலைப் பாடல்கள், அறநெறிக் கதைகள் ஆகியப் பாடப்பொருகள் இதில் அடங்கும்.
பாட எண் |
பாடப்பொருள் |
1 |
எழுத்துகள் அறிமுகம் |
2 |
சொற்கள் கற்றல் |
3 |
சிறுதொடர் கற்றல் |
4 |
எழுதும் பயிற்சி |
5 |
மழலைப் பாடல்கள் |
6 |
அறநெறிக் கதைகள் |
BM00 இடைநிலை
சொல், பொருள், தொடர், இலக்கணம் ஆகிய மொழிக் கூறுகள்- கேட்டுக் கற்றல், படித்துக்கற்றல், பேசிக்கற்றல், எழுதிக்கற்றல் ஆகிய திறன்களை வளர்க்கும் வகையில் கீழ்க்காணும் 20 தலைப்புகளில் பாடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும் மேல் நிலைப் பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் உருவமைக்கப்பட்டுள்ளன.
பாட எண் |
பாடப்பொருள் |
1 |
உயிரியல் பூங்கா |
2 |
சந்தை |
3 |
விடுதி |
4 |
மஞ்சு விரட்டு |
5 |
மணி அறிதல் |
6 |
திசைகள் |
7 |
என் குடும்பம் |
8 |
பாரதியார் |
9 |
தஞ்சை பெரிய கோயில் |
10 |
பொங்கல் திருநாள் |
11 |
விருந்து ஆளுக்கா? ஆடைக்கா? |
12 |
சிலப்பதிகாரம் |
13 |
கணைக்கால் இரும்பொறை |
14 |
மாமல்லபுரம் |
15 |
தாத்தாவின் கடிதம் |
16 |
மழையின் கதை |
17 |
பொய்க்கால் குதிரை |
18 |
விருந்தோம்பல் |
19 |
ஆதிமந்தி |
20 |
பயணம் |
BA00 மேல்நிலை
அறிவியல் கட்டுரை, பயணக்கட்டுரை, இலக்கியக் கட்டுரை, கடிதம், நேர்காணல், நாடகம், உரையாடல், சிறுகதை, வருணனை, இதழியல் பயன்பாடு போன்ற உரைநடைத் தமிழ் ; வாழ்த்துப்பாடல், நாட்டுப்புறப்பாடல், அறவுரைப்பாடல், மறுமலர்ச்சிப் பாடல், தொடர்நிலைச் செய்யுள், பல்சுவைப்பாடல் போன்ற கவிதைத் தமிழ் ஆகியவற்றில் திறன்களை வளர்க்கும் வகையில் கீழ்க்காணும் 18 தலைப்புகளில் மேல் நிலைப்பாடங்கள் அமைகின்றன. இதனுள் மொழிப்பயன்பாட்டிற்குத் துணையான மரபியல் இலக்கணப் பாடங்களும் தரப்படுகின்றன. மேல்நிலைப் பாடங்கள்- இடைநிலைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும், தமிழகப் பள்ளிக் கல்வியின் 6 ஆம் வகுப்பு வரையிலான திறன்களைத் தழுவியனவாகவும் அமைந்துள்ளன.
பாட எண் |
பாடப்பொருள் |
1. |
இறைவாழ்த்து, மொழிவாழ்த்து |
2. |
குழந்தைகளும் கல்வியும் (உரையாடல்) |
3. |
வருணனை |
4. |
நாட்டுப்புறப் பாடல்கள் |
5. |
செய்தி |
6. |
தீபங்கள் |
7. |
எல்லாம் போச்சு |
8. |
புத்தரும் ஏழைச் சிறுவனும் (தொடர்நிலைச் செய்யுள் ) |
9. |
வள்ளுவரின் மெய்ப்பொருள் |
10. |
ஒளவை பெற்ற நெல்லிக்கனி |
11. |
பல்சுவைப் பாடல்கள் |
12. |
அன்னைக்கு |
13. |
சதுரங்கச் சாதனையாளர் விஜயலட்சுமியுடன் ஒரு சிறப்பு நேர்காணல் |
14. |
அறவுரைப் பகுதி |
15. |
சித்தார்த்தன் (நாடகம்) |
16. |
ஏனாதிநாதர் |
17. |
மறுமலர்ச்சிப் பாடல்கள் |
18. |
கணிப்பொறி நினைவகம் |
மேற்காணும் அடிப்படை, இடைநிலை, மேல்நிலைப் பாடத்திட்டங்கள் அனைத்தும் அரசாணை (நிலை) எண்.300 நாள் 20.12.07 இல் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளன. அரசாணையை க் காண இங்கே சுட்டுக |
மேற்சான்றிதழ்க் கல்வி
த.இ.க. சான்றிதழ்க் கல்வியின் அடுத்தக்கட்ட வளர்ச்சி மேற்சான்றிதழ்க் கல்வி ஆகும். இஃது தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்விப் பாடத் திறனில் ஏழாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரையான கல்விப் பாடத் திறன்களை உள்ளடக்கியப் பாடத்தொகுப்பு நிலையாகும்.
இவை,
HG10 நிலை - 1 (7 & 8
வகுப்புகள்)
HG20 நிலை - 2 (9 & 10 வகுப்புகள்)
HG30 நிலை - 3 (11 & 12 வகுப்புகள்)
எனும் மூன்று நிலைகளில் வழங்கும் பாடத்திட்டமாக உருவாக்கப் பெற்றுள்ளன.
HG10 : நிலை - 1
இந்நிலையில், வாழ்த்துப் பாடல்கள், சமயப் பாடல்கள், இடைக்கால இலக்கியப் பாடல்கள், மறுமலர்ச்சி இலக்கியப் பாடல்கள், காப்பிய அறிமுகப் பாடல்கள் ஆகியவை செய்யுள் பகுதியாக இடம் பெறுகின்றன.
தமிழ்ச் சான்றோர் மற்றும் தமிழ் வளம், கதை இலக்கியம், தன் வரலாற்று இலக்கியம், கடித இலக்கியம், அறிவியல் இலக்கியம், நாடக இலக்கியம் ஆகியவனவற்றை அறிமுகம் செய்யும் பாடப் பொருண்மைகளாக உரைநடைப் பகுதியில் ஆறு பாடங்கள் அமைந்துள்ளன.
மொழி மரபு, அதன் தொடர்பான பல்வேறு இலக்கணங்களை மூன்றாம் பகுதியில் கற்குமாறு ஆறு பாடங்கள் வழங்கப் பெறுகின்றன.
எனும் மூன்று நிலைகளில் வழங்கும் பாடத்திட்டமாக உருவாக்கப் பெற்றுள்ளன.
பாட எண் |
பாடப்பொருள் |
செய்யுள் |
|
1. |
வாழ்த்து |
2. |
நீதிப் பாடல்கள் |
3. |
பக்திப் பாடல்கள் |
4. |
பல்சுவைப் பாடல்கள் |
5. |
மறுமலர்ச்சிப் பாடல்கள் |
6. |
நெடுங்கவிதை |
உரைநடை |
|
7. |
செந்தமிழ் |
8. |
நஞ்சுண்ட நாயக மூர்த்தி |
9. |
வாழைமரம் |
10. |
காஞ்சிபுரம் |
11. |
நோபல் பரிசு பெற்ற தமிழர் |
12. |
தமிழ் மண்டபம் |
இலக்கணம் |
|
13. |
எழுத்து |
14. |
சொல் |
15. |
பெயர்ச்சொல், வேற்றுமை, ஆகுபெயர் இலக்கணம் |
16. |
வினைச்சொல் |
17. |
புணர்ச்சி |
18. |
யாப்பு, அணி |
இப்பதினெட்டுப் பாடங்களும் முதன்மைத் தளத்தில் ஏற்றப் பெற்றுள்ளன
HG20 : நிலை - 2
நிலை இரண்டனுக்குரியப் பாடங்கள் முப்பகுதிகளை உடையவை; அவை செய்யுள், உரைநடை, இலக்கணம் என்பன ஆகும். வாழ்த்து, அற இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், இக்கால இலக்கியம், சமய இலக்கியம் ஆகிய ஆறு பாடங்கள் செய்யுளில் அமைந்துள்ளன. இவை செய்யுள் இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துகின்றன.
அறிவு உலகின் உயர்ந்தோர் வரலாறு, சிறுகதை, நாட்டுப்பற்று, வரலாற்றுச் சின்னங்கள், அறிவியல் கண்டுபிடிப்பு, சங்க இலக்கியப் பண்பாட்டியல் வரலாறு போன்றவற்றை விளக்கும் பாடப் பொருண்மைகள் கொண்ட ஆறு பாடங்கள் உரைநடையில் கொடுக்கப் பெற்றுள்ளன.
மொழி இலக்கணம், மரபு, பொருள் தொடர்பான இலக்கணப் பகுதிகள் மூன்றாம் பிரிவில் ஆறு பாடங்களாக இடம்பெறுகின்றன.
பாட எண் |
பாடப்பொருள் |
செய்யுள் |
|
1. |
வாழ்த்து |
2. |
அற இலக்கியம் |
3. |
காப்பிய இலக்கியம் |
4. |
சிற்றிலக்கியம் |
5. |
இக்கால இலக்கியம் |
6. |
சமய இலக்கியம் |
உரைநடை |
|
7. |
பகுத்தறிவு பகலவன் |
8. |
வெற்றி யாருக்கு? |
9. |
நாட்டுக் கொடி |
10. |
சித்தன்ன வாசல் |
11. |
தொடர்வண்டி |
12. |
வள்ளல் பாரி |
இலக்கணம் |
|
13. |
எழுத்தும் சொல்லும் |
14. |
பெயரும் வினையும் |
15. |
புணர்ச்சி |
16. |
யாப்பு |
17. |
அணி |
18. |
பொருள் |
இப்பதினெண் பாடங்களும் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் திறனுக்கு ஒப்பாக உள்ளன. இவை தமிழ் இணையக் கல்விக்கழகம் முதன்மைத் தளத்தில் ஏற்றப் பெற்றுள்ளன.
HG30 : நிலை - 3
நிலை மூன்றனுக்குரியப் பாடங்கள் முப்பகுதிகளை உடையன. அவை, 1. செய்யுள் பகுதி, (2) உரைநடைப் பகுதி, (3) இலக்கணப் பகுதி என்பனவாகும். ஒவ்வொரு பகுதியும் ஆறு ஆறு பாடங்களைக் கொண்டவை. வாழ்த்து இலக்கியம், அற இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், இக்கால இலக்கியம், சமய இலக்கியம் என்பன செய்யுள் பகுதியில் விளக்கப் பெறுகின்றன.
தமிழ்ச் சான்றோர் / மொழி வரலாற்று இலக்கியம், கதை இலக்கியம், தன் வரலாற்று இலக்கியம், கடித இலக்கியம், அறிவியல் இலக்கியம், நாடக இலக்கியம் என்பன உரைநடைப் பகுதியில் இடம் பெறுகின்றன.
மூன்றாம் பகுதி இலக்கணப் பகுதி ஆகும். இதில் எழுத்து - சொல், புணர்ச்சி, யாப்பு, அணி, பொருள், பொது எனும் ஆறு தலைப்புகளில் பாடங்கள் உருவாக்கப் பெற்றுள்ளன.
பாட எண் |
பாடப்பொருள் |
செய்யுள் |
|
1. |
வாழ்த்து இலக்கியம் |
2. |
அற இலக்கியம் |
3. |
காப்பிய இலக்கியம் |
4. |
சிற்றிலக்கியம் |
5. |
இக்கால இலக்கியம் |
6. |
சமய இலக்கியம் |
உரைநடை |
|
7. |
செந்தமிழ்க் காஞ்சி |
8. |
நடப்பதெல்லாம் நன்மைக்கே! |
9. |
காவிரி |
10. |
குற்றாலம் |
11. |
வான ஊர்தி |
12. |
இளையவன் இவனா? |
இலக்கணம் |
|
13. |
எழுத்து, சொல் |
14. |
புணர்ச்சி |
15. |
யாப்பு |
16. |
அணி |
17. |
பொருள் |
18. |
பொது |
இப்பாடங்கள் பதினெட்டும் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் திறனுக்கு ஒப்பாக அமைந்துள்ளன. இவைகள் த.இ.க.வின் முதன்மைத் தளத்தில் ஏற்றப் பெற்றுள்ளன.