சாலினி கண்ணகியை எவ்வாறு பாராட்டுகிறாள்?
சாலினி கண்ணகியைக் கடவுளாகவே போற்றுகிறாள். அவள்
கொங்கு நாடு, குட நாடு, தென்தமிழ் நாடு ஆகிய நாடுகளை
ஆளும் தெய்வமகள்; முற்பிறப்பில் செய்த தவத்தின்
காரணமாக வந்து அவதாரம் செய்தவள்; மிக உயர்ந்த
மாணிக்க மணி பெண் உருக் கொண்டது போன்ற
சிறப்புடையவள் என்று சாலினி கண்ணகியைப்
பாராட்டுகிறாள்
|