மணிமேகலைக் காப்பியப் பாவிகம் பற்றி நீவிர்
அறிவன யாவை?
உலகில் மக்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு காரணம் பற்றி
நிகழ்கின்றதேயன்றி வேறில்லை. இப்பிறப்பில் மக்களுக்கு உண்டாகும்
நன்மை தீமைகளுக்குக் காரணம் முன்னை வினைப் பயனே ஆகும். பிறப்புப் பல மாறினும் வினைப்
பயன் விடாது வந்து பற்றும் என்பதை வலியுறுத்துவதே மணிமேகலைக் காப்பியப் பாவிகம்
ஆகும்.
|