தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

மணிமேகலா தெய்வத்தின் செயல்பாடு என்ன?

மணிமேகலா தெய்வம் இல்லை என்றால் மணிமேகலைக் காப்பியமே இல்லை என்னும் அளவுக்கு இத்தெய்வச் செயல்பாடு காப்பியத்தில் நிறைந்து காணப்படுகிறது. உதயகுமரனின் காதல் வலையிலிருந்து காப்பாற்றி மணிமேகலையை மணிபல்லவம் எடுத்துச் செல்கிறது. அங்கு அவளுக்கு ‘அமுத சுரபி’ பெறவும், பழம்பிறப்பு அறியவும் உதவுகிறது. மந்திரம் உபதேசித்து மணிமேகலையைப் பல்வேறு துன்பங்களிலிருந்து காப்பாற்றவும் செய்கிறது.

முன்