பாடம் - 2

A01122  பெரியபுராணம் : இலக்கியச்சுவை


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் பெரியபுராண இலக்கியச் சுவை பற்றியது. பெரியபுராணத்தில் அமைந்துள்ள கற்பனை, சொல்லாட்சி, அணிநலன் முதலியவற்றை இப்பாடம் விவரிக்கிறது; நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை முழுவதும் விளக்கிக் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
 

  • பெரியபுராண இலக்கியச் சுவை பற்றிய செய்திகளை அறியலாம்.

  • பெரியபுராணத்தில் இலக்கியக் கற்பனை வளம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஒரு சில சான்றுகள் மூலம் உணரலாம்.

  • பாடல்களில் சொல்லாட்சி எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் அதன் மூலம் பாடல் எவ்வாறு சுவை பெறுகிறது என்பதையும் அறியலாம்.

  • பெரியபுராணத்தில் அமைந்துள்ள அணிநலன்கள் பற்றிய சில செய்திகளை அறியலாம்.

  • நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளலாம்.

பாட அமைப்பு