பாடம் - 3

A01123    கம்பராமாயணம் : காப்பிய அறிமுகம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் கம்பராமாயணக் காப்பிய அறிமுகம் பற்றியது. தமிழில் உள்ள இராமாயணக் குறிப்புகள் பற்றியும், கம்பர் வாழ்க்கை வரலாறு பற்றியும், கம்பராமாயண அமைப்புப் பற்றியும் இப்பாடம் விவரித்துக் கூறுகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இப்பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • கம்பராமாயணத்தைப் பொதுவான நிலையில் அறிந்து கொள்ளலாம்.

  • கம்பருடைய வாழ்க்கை வரலாறு, கம்பர் இயற்றிய நூல்கள், கம்பர் பற்றி வழங்கும் கதைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

  • கம்பர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்பதைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

  • தென்னிந்திய மொழிகளில் இராமாயணம் இயற்றப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

  • பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இராமாயணக் குறிப்புகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  • கம்பராமாயணக் காப்பிய அமைப்பையும் கதையையும் அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு