பாடம் - 5

A01125  வில்லி பாரதம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தமிழில் உள்ள வில்லி பாரதம் பற்றியது. தமிழில் உள்ள மகாபாரதக் குறிப்புகள், வில்லி பாரத ஆசிரியர் பற்றிய வரலாறு, வில்லி பாரதக் காப்பிய அமைப்பு, காப்பியச் சுவை முதலியவற்றை இப்பாடம் விவரிக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இப்பாடத்தைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
 

  • இந்திய இதிகாசங்களில் மகாபாரதம் பற்றிய பொதுவான செய்திகளை அறியலாம்.

  • பண்டைத் தமிழ் இலக்கியங்களில் மகாபாரதம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளதை அறியலாம்.

  • தமிழில் தோன்றிய மகாபாரதம் பற்றிய மற்ற நூல்களைப் பற்றி அறியலாம்.

  • வில்லி பாரதத்தின் ஆசிரியராகிய வில்லிபுத்தூரார் வாழ்க்கை வரலாறு, அவர் பாரதம் பாட நேர்ந்ததற்கான காரணங்கள், அவர் வாழ்ந்த காலம் முதலிய செய்திகளை அறியலாம்.

  • வில்லி பாரதக் காப்பியத்தின் அமைப்பையும் கதையையும் அறியலாம்.

  • வில்லி பாரதக் காப்பியச் சுவையை அறியலாம். பாயிரம், தமிழின் சிறப்பு, விநாயகருக்கும் பாரதத்துக்கும் உள்ள தொடர்பு, வருணனைகள், கற்பனைகள் ஆகியவற்றை அறியலாம்.

பாட அமைப்பு