தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2)

இராவண காவியத்தின் தோற்றக் காரணம் யாது?

இராமாயணக் காப்பியத்தின் நாயகனாகிய இராமன் குணங்களால் நிறைந்தவனாகவும் இராவணன் குணக் குறைபாடு உடையவனாகவும் இராமனைத் தெய்வம் என்றும் இராவணனை அரக்கன் என்றும் வான்மீகி, கம்பர் உள்ளிட்டோர் புனைந்துள்ளனர். இவ்வாறு புனைந்திருப்பது உண்மைக்கு மாறானது. இராவணன் திராவிடர்களின் முன்னோடி, அரக்கன் இல்லை. அருங்குணங்கள் நிரம்பியவன் என்று சுயமரியாதை இயக்கச் சிந்தனை சுட்டிக் காட்டியது. சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் இராவண காவியத் தோற்றத்திற்குக் காரணமாகும்.


முன்