4.4 காப்பியத்தில் செய்தி |
பூங்கொடிக் காப்பியம், தமிழர்களின் ஒற்றுமை, தமிழ் மொழிக்காப்பு, தமிழை ஆட்சி மொழியாக்கல், பிறமொழிக் கலப்பிலிருந்து தமிழைக் காப்பாற்றுதல், மேற்குறிப்பிட்டவைகளைச் செயல்படுத்த மொழிப்போராட்டம் நடத்துதல் போன்றவற்றை, தமிழர்கள் செய்ய வேண்டுமெனப் பல அறிவுரைகளை - கருத்துகளைக் கூறுகின்றது. |
சாதி, சமய, இன வேறுபாடுகள் நம் ஒற்றுமையைக் குலைக்கின்றன. அதனால், ஒன்றுபட்டு, ஒற்றுமையாகச் செயல்பட்டு, தமிழுக்கு ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றமுடியாமல் போய்விட்டது. இனியாவது தமிழர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று வேண்டுகிறார் முடியரசன். இக்கருத்தைப் பூங்கொடி எனும் கதை மாந்தர் மூலம் வெளிப்படுத்துகிறார். |
முத்தமிழ் மாநாடு ஒன்றைத் தன் சுய முயற்சியால் நடத்துகிறாள் பூங்கொடி. அம்மாநாட்டில் அவள் பேசும்பொழுது, தமிழர் ஒற்றுமையை வலியுறுத்துகிறாள். |
பிறப்பால்
வழக்கால் பேசும் மொழியால் |
(அறப்போர் நிகழ்த்திய காதை, 62 - 68) |
(வாகை = வெற்றி; ஓகை = மகிழ்ச்சி) |
என்று குறிப்பிடுகிறாள். |
தமிழர் ஒற்றுமையாயிருந்தால் பல சாதனைகளைப் படைக்கலாம் என்று நம்பினார் முடியரசன். எனவே, ஒன்றுபட்டு வாழ்ந்து, பல கடமைகளைத் தமிழர் செய்யவேண்டும் என்று குறிப்பிடுகிறார். |
காப்பியத்தின் கிளைக் கதையில் இடம்பெறும் மீனவன் இறைவழிபாட்டில் தமிழுக்கு உரிமை கோரி மறியல் செய்தான். |
இழிவாம்
இச்செயல்! இனிமேல்
தமிழால் |
(மீனவன் வரலாறுணர்ந்த காதை 112 - 113) |
என்று வேண்டினான். வழிபாட்டு மொழி வடமொழியாய் இருந்தமையால் மறையோர் அவன் கருத்தை ஏற்க மறுத்ததோடு, கயவர்களைக் கொண்டு அவனைத் தாக்கவும் செய்தனர். |
தமிழக எல்லையில் தமிழே ஆட்சிமொழியாக வேண்டும் என்றால் கடவுள் வழிபாட்டிலும் தமிழ் என்பது அதில் அடக்கம்தானே? கடவுள் வழிபாட்டிற்குக் கோயில் எழுப்பியோர் தமிழர். கோயிலில் உறையும் கடவுளும் தமிழர்க்கே உரியவர் ஆவார். உள்ளம் உருக அக்கடவுளை வழிபடுவோரும் தமிழர்களே! |
தமிழ்மொழியை நலிவுறாமல் காப்பது தமிழ்மொழிக் காப்பு ஆகும். தமிழைக் காக்கும் பணியில் அதனை வளப்படுத்துவதும் அடங்கும். அதனை வளப்படுத்தும் பணிகளில் ஒன்று பிறமொழிகளில் காணக் கிடக்கும் அரிய கருத்துகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதுமாகும். |
|
தமிழ்மொழிக் காப்புப் பணியில் மற்றொன்று, பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் வருவோரைக் கண்டு நல்லறிவூட்டி அவர்களைத் திருத்துவதுமாகும். |
|
பல்துறை சான்ற பொருளியல் நூல்கள், அறிவியல் நூல்கள், உள நூல்கள், நில நூல்கள், தத்துவ நூல்கள் முதலிய நூல்களையும் தமிழில் படைத்துத் தருதல் தமிழ்வளர்ச்சிக்கு ஆக்கம் தரும். |
|
தமிழில் இருக்கும் கலைச்செல்வங்களை, இலக்கண இலக்கியங்களைச் சிதைவுறாமல் காப்பதும் தமிழ் வளர்ச்சிப் பணியாகும். |
தாய்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை மொழிக்கலப்பு எனலாம். ஒவ்வொருவரும் தம் தாய்மொழியில் பேசும்போதும், எழுதும்போதும், பிறமொழிச் சொற்களைக் கலப்பதைத் தவிர்ப்பது நல்லது. இக்கருத்திற்கு மாறாகத் தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை நீக்கினால் தமிழ் வளராது என்றும் சிலர் கூறுகின்றனர். செம்பொன்னோடு செம்பு கலந்தால்தான் நல்ல அணிகலன்களை உருவாக்க முடியும் என்பது மொழிக் கலப்பை ஏற்போர் கருத்து. செம்பொன்னோடு செம்பு கலக்கும்போது அளவிற்கு அதிகமாகக் கலந்துவிட்டால் செம்பொன்னில் அணிகலன்கள் செய்ய முடியாது. |
தமிழ்மொழி பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் தகுதி உடையது என்பதை மொழிநூல் வல்லார்கள் கூறுகின்றனர். அவ்வகையில் தமிழ் உயர்தனிச் செம்மொழியாக விளங்குகின்றது. தமிழில் பிறமொழிக் கலப்பை ஆதரிப்பது இனிப்பான அமிழ்தம் இருக்க, அதன் சுவைக்காக வெல்லத்தை அதனோடு கலப்பது போன்றதாகும். |
கவிஞர் முடியரசன் மொழிக்கலப்பை ஆதரிக்காதவர். அவர் மொழிக்கலப்புப் பற்றிக் கூறியிருக்கும் கருத்தை நோக்குங்கள்: |
அமிழ்தம்
இனிக்க அச்சு வெல்லம் |
(மலையுறையடிகள் வாழ்த்திய காதை, 52 - 58) |
(அமிழ்தம் = சாவாமல் முதுமையடையாமல் காப்பது, தேவர் உலகில் இருப்பது; அச்சுவெல்லம் = வெல்லத்தில் ஒருவகை, மிகவும் இனிப்பானது; உலப்பிலா = கெடுதல் இல்லாத; கலன் = அணிகலன், நகைகள்) |
பூங்கொடிக் காப்பியம் மொழி பற்றிய சிந்தனையை முன்னெடுத்துச் செல்கிறது. தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து எழுபது வரையிலான காலக் கட்டத்தில் மொழிப்போராட்டம் வீறுபெற்றிருந்தது. ஐயமிலாப் புன்மொழியைத் திணிக்கும் முயற்சி நடந்தது. தாய்மொழி வளர்ச்சி போதிய அளவும் இல்லாதபோது, போதிய கல்வியறிவு இல்லாத நாட்டில், பிறமொழியைப் பயில்வது நலம் பயக்காது. இத்தகைய சூழலில்தான் மொழிப்போராட்டம் தொடர்ந்தது. அது போன்றதொரு மொழிப்போராட்டத்தைப் பூங்கொடிக் காப்பியத்தின் கதைக் கருவாக்கிப் படைத்துள்ளார் கவிஞர் முடியரசன். |
மொழிப்போராட்டத்தில் நோக்கம் என்ன என்பதையும் நோக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள தமிழ், ஆட்சியின் துறைகளில் எல்லாம் இடம் பெறவேண்டும். ஆட்சியியலில் வேற்றுமொழி இடம் பெறல் தவிர்க்கப்படல் வேண்டும். இதன் இன்றியமையாமையைப் பலமுறை ஆள்வோர்க்கு எடுத்துரைத்தும் ஆள்வோர் செவிசாய்க்கவில்லை. இச்சூழலில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மொழிப்போராட்டத்தில் இறங்கினர். கவிஞர் முடியரசன் பூங்கொடியின் குரலில் இதனை, |
துறைதொறும்
துறைதொறும் தூயநற் றமிழே |
(சொற்போர் நிகழ்த்திய காதை 224 - 232) |
(மாட்சிமை = சீரிய தன்மை; ஆன்று அமைந்து அடங்கிய = உயரிய பண்புகள் பொருந்திய) |
மொழிப்போராட்டத்தில் சிறைப்பட்ட பூங்கொடி நோய்வாய்ப்பட்டு, சிறையிலிருந்து வெளிவரும் முன்னரே உயிர் நீத்தாள். |
இவ்வாறு மொழியுணர்ச்சிக்காகவும் தன் தாய்மொழி ஆட்சியுரிமை பெறுவதற்காகவும் தமிழ் வாழ்க்கைத் துறைகள் பலவற்றிலும் உரிய பங்காற்றுவதற்காகவும் ஒரு மொழிப்போராட்டத்தைப் பூங்கொடி நடத்தியதைப் பூங்கொடிக் காப்பியத்தால் அறியலாம். |