தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
5) |
மலையுறையடிகள் பூங்கொடியின் வளர்ச்சியில் எவ்வெவ்வாறு துணை நின்றார்? விளக்குக. |
மலையுறையடிகள்
பூங்கொடிபால் அளவற்ற அன்புடையவர்.
மீனவன், எழிலி ஆகியோரின் வாழ்க்கை
வரலாற்றைக் கூறி
அவர் அவளைத் தமிழிசைப்
பணியில் ஈடுபடுத்தினார்.
அதுமட்டுமன்றி அயல்நாடு சென்ற
தமிழ்த் தூதுக் குழுவில்
அவளும் ஈடுபடப்
பாடுபட்டார். கோமகன்
கொலை
காரணமாகப் பூங்கொடி
சிறைப்பட்டதை அறிந்து வருந்தி
அருண்மொழியோடு வேங்கை
நகர்க்கு அவளைக் காண
விரைந்தார். பூங்கொடி
கூறுவதுபோல மலையுறையடிகள்
‘தாயின் மனமும்
தந்தையின் நிலையும்’
கொண்டு
திகழ்ந்தார்.
இவ்வாறு
மலையுறையடிகள் அவன்
வளர்ச்சிக்குப் பல நிலைகளில் துணை
நின்றார். |