தன் மதிப்பீடு
: விடைகள் - II |
|
3) |
டிடோ
மற்றும் டர்னஸ்
பாத்திரங்கள்
எவ்வாறு
ஏனியாஸின் பாத்திரத்திற்கு
எதிர்மறையாக
விளங்குகின்றன? |
டிடோ மற்றும் டர்னஸின் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏனியாஸின் விவேகத்திற்கும் கடமையுணர்ச்சிக்கும் மாறாக அமைந்துள்ளது. ஓர் அரசியின் கடமை கருதி, காதலைத் துறக்கும் சக்தியற்ற டிடோவும் கோபமே உருவான டர்னஸும் விதியின் வலிமையை உணராதவர்கள். ஏனியாஸ் விதிக்கு அடிபணிந்து நடப்பவன். இவ்வாறாக டிடோ மற்றும் டர்னஸ் கதாப்பாத்திரங்கள் ஏனியாஸின் பாத்திரப் படைப்பிற்கு எதிர்மறையாக விளங்குகின்றன. |