திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். இங்கே இனம் என்ற பொருளில் திணை என்னும் சொல் இடம்பெறுகிறது. உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணையின் அடிப்படையில் பகுக்க முடியும். இந்தத் திணையைத் தமிழ் இலக்கண நூலார் இரண்டு வகையாகப் பகுத்துள்ளனர். அவை வருமாறு: 1) உயர்திணை பகுத்தறிவு கொண்ட மக்களையும் தேவரையும் நரகரையும் குறிப்பது உயர்திணை எனப்படும். (எ.கா) அறிவன், முருகன் இதில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் என்னும் சொல் உலக மக்களைக் குறிக்கும். தேவர் என்னும் சொல் கடவுளரைக் குறிக்கும். நரகர் என்னும் சொல் நரகத்தில் வாழ்கிறவர்களைக் குறிக்கும் என்று கூறுவார்கள். தேவர், நரகர் என்று குறிப்பிடப்படுபவர்கள் இந்த உலகில் வாழவில்லை என்றாலும் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இவர்களும் உயர்திணை என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்கள். மக்கள், தேவர், நரகர் அல்லாத உயிர் உள்ள பொருள்களும் உயிர் இல்லாத பொருள்களும் அஃறிணை எனப்படும். (எ.கா) புலி, கல், கடல் அஃறிணை என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் ஆறு அறிவில் குறைந்தவை ஆகும். இதில் ஊர்வன, பறப்பன, உயிர் இல்லாதவை அனைத்தும் அடங்கும். இவற்றைக் குறிப்பதற்கு உரிய அஃறிணை என்னும் சொல் அல் + திணை என்னும் சொற்களின் சேர்ந்த வடிவம் ஆகும். உயர்ந்த இனம் அல்லாதவை என்பது இதன் பொருள். மக்கள், தேவர், நரகர் என்று உயர்திணையில் குறிப்பிடப்பட்டோரில் உயிர் இல்லாத உடலும் (பிணம்) அஃறிணை என்றே குறிக்கப்படும்.
மக்களும் தேவரும் நரகரும் உயர்திணை எனப்படுவர். இவர்கள் தவிர ஏனைய உயிர் உள்ள பொருள்களும் உயிர் இல்லாத பொருள்களும் அஃறிணை எனப்படும். உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வரும் பெயர் திணைப் பொதுப்பெயர் எனப்படும். சாத்தன், கொற்றன், சூரியன், சந்திரன் முதலான பெயர்கள் உயர்திணையிலும் அஃறிணையிலும் உள்ள ஆண்பாலுக்குப் பொதுவாய் வரும். சாத்தி, கொற்றி முதலான பெயர்கள் உயர்திணையிலும் அஃறிணையிலும் உள்ள பெண்பாலுக்குப் பொதுவாய் வரும். (எ.கா)
அவன் சாத்தன் தாய், தந்தை என்னும் முறைப்பெயர்களும், தன்மை, முன்னிலை இடப்பெயர்களும், தான், தாம் ஆகிய படர்க்கை இடப்பெயர்களும், மூவிடத்துக்கும் பொதுவான 'எல்லாம்' எனும்பெயரும் இருதிணைகளுக்கும் பொதுவாய் வருவன ஆகும். தந்தை
இவன் தந்தை, தாய் என்னும் முறைப்பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வந்துள்ளன. நான்
கோவன் நான், நாம், யான், யாம் என்னும் தன்மை இடப்பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வந்துள்ளன. நீ
பாவை நீ, நீர், நீவிர், நீயிர், எல்லீர் என்னும் முன்னிலை இடப்பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வந்துள்ளன. அவன் தான் தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வந்துள்ளன. எல்லாம் எனும்பெயர் மூவிடத்துக்கும் பொதுவாய் வந்துள்ளது.
|