தன் மதிப்பீடு : விடைகள் : II
3.
‘தாம்’ என்ற சொல் பொதுப் பெயராக எவ்வாறு வரும்?
‘தாம்’ என்ற சொல் உயர்திணை, அஃறிணை ஆகிய
இருதிணைக்கும் பொதுவாய், பலர்பாலையும் பலவின்பாலையும்
உணர்த்தி வரும்.
எடுத்துக்காட்டு
பெரியோர் தாம் கூறியதைச்
செய்வர்
- பலர்பால்
தாம் என்ற
சொல் இரு
திணைக்கும்
பொதுவாக
வந்துள்ளது.
பறவைகள் தாம் தங்கிய
இடத்திற்கே செல்லும்.
- பலவின்பால்
முன்