1.0 பாட முன்னுரை

சொல் இலக்கணம் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காகப் பகுத்துப் பேசுகிறது. இவற்றுள் பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும் தனித்து இயங்கும் சொற்களாகும். இடைச்சொல்லும், உரிச்சொல்லும் பெயர், வினைகளில் ஒன்றைச் சார்ந்தே இயங்குவனவாகும். இவற்றுள் முந்திய பாடத் தொகுதியில் (co212) பெயர்ச்சொல் இலக்கணத்தை அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது, வினைச்சொல் இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.