3.6 தொகுப்புரை

இப்பாடத்தில் முன்னிலை வினைமுற்றுகள் பற்றிப் பார்த்தோம். முன்னிலை வினை ஒருமை, பன்மையை மட்டும் உணர்த்தும். இவ்வினையில் பெரும்பாலும் தெரிநிலை, குறிப்பு ஆகிய இரண்டிற்கும் ஒரே வகையான வினைமுற்று விகுதிகளே உள்ளன. முன்னிலை வினையின் ஒரு வகையே ஏவல் வினை. இது, எதிர்காலத்திற்கு மட்டும் உரியது. வியங்கோள் வினையும் ஒரு வகையில் ஏவல் என்றாலும் வியங்கோள் மூவிடத்திற்கும் உரியது. ஆதலால் தனி வினையாகப் பேசப்பட்டு வருகிறது. இவ்வினைமுற்றுகளுக்குரிய விகுதிகள் பற்றியும் இப்பாடத்தில் பார்த்தோம். குறிப்பாக, பழங்காலத்தில் இருந்த விகுதிகள் நினைவுபடுத்திக் கொள்ளத் தக்கனவாகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்றுகளுக்குரிய விகுதிகள் யாவை?

விடை

2.

ஏவல் வினை எந்தக் காலத்தையாவது சுட்டுமா?

விடை

3.

முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்றுகளுக்கான விகுதிகளைக் குறிப்பிடுக.

விடை

4.

வியங்கோள் என்பதற்குரிய பொருள் யாது?

விடை

5.

வியங்கோள் வினை முன்னிலைக்கு மட்டும் உரியதா?

விடை

6.

வியங்கோள் வினை எவ்வெப் பொருள்களில் வரும்?

விடை

7.

வியங்கோள் வினை விகுதிகளுள் இரண்டினை எழுதுக.

விடை

8.

ஏவல் வினைக்கும், வியங்கோள் வினைக்கும் இடையே வேறுபாடுகளாக நீவிர் அறிவன யாவை?

விடை