3.4 முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று
முன்னிலையில் உள்ள பலரை நோக்கிக் கட்டளைப் பொருளில் வரும் வினைச் சொற்கள்
முன்னிலை ஏவல் பன்மை வினைமுற்றுகள் எனப்படும். இவை இர், ஈர், மின் எனும் விகுதிகளைப் பெற்று வரும்.
உண்ணிர் | | = |
(உண்ணுங்கள்) |
உண்ணீர் | | = |
(உண்ணுங்கள்) |
காப்பீர் | |
= | (காத்து இருங்கள்) |
காண்மின் | | = |
(காணுங்கள்) |
சென்மின் | | = |
(செல்லுங்கள்) |
என்பன போன்று இவ்விகுதிகள் வினைப் பகுதியோடு சேர்ந்து வரும்.
செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைந்த வினைச்சொற்களும் முன்னிலைப் பன்மை ஏவலுக்குப் பயன்படுகின்றன.
நீர் செய்யும், | | கேளும் |
நீர் வாரும், | | எழுதும் |
நீர் உண்ணும், | | சொல்லும் |
என்பன போன்று இச்சொற்கள் அமையும். இக்காலத்தில் செய்யும் எனும் சொல்லோடு கள் விகுதி சேர்த்துச் செய்யுங்கள் என்பது போல் வருவதே பெரும்பான்மை.
நீங்கள் செய்யுங்கள்
நீங்கள் தாருங்கள்
நீங்கள் பாருங்கள்
என்பன போல இச் சொற்கள் ஆளப்படுகின்றன.
|