4.0 பாட முன்னுரை
படர்க்கை என்னும் சொல் பேசப்படுபவரைக் குறிக்கும் சொல்லாகும். ‘அவன் வந்தான்’ என்னும் தொடரில் ‘வந்தான்’ என்பது படர்க்கை வினைமுற்றுச் சொல். மூவிடப் பெயர்களில் தன்மை, முன்னிலைக்குரிய வினைமுற்றுகள் பற்றி முந்திய இரு பாடங்களில் படித்தீர்கள். இந்தப் பாடத்தில் படர்க்கை வினைமுற்றுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
|