6.3 வினையாலணையும் பெயர் காலம் காட்டுதல்

பெயர்ச்சொல் காலம் காட்டாது. ஆனால் வினையாலணையும் பெயர் மட்டும் காலம் காட்டும்.

வினையாலணையும் பெயர், பெயர்ச்சொல்லைப் போன்று வேற்றுமை உருபு ஏற்கும். வினைச்சொல்லைப் போன்று காலம் காட்டும்.

செயலைக் குறிப்பதுடன், செய்தவனையும் குறிப்பது வினையாலணையும் பெயரின் இயல்பாகும்.

(எ.கா) வந்தானைக் கண்டேன்
வந்தவன் சென்றான்

வினையாலணையும் பெயர், வினைமுற்றைப் போலவே இருதிணை ஐம்பால் சொற்களில் காலம் காட்டுவது ஆகும்.