1.0 பாட முன்னுரை
|
நாம் நம்முடைய கருத்துகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு மொழிதான் துணை புரிகிறது. மக்கள் வாழ மொழி வேண்டும். மொழி வாழ இலக்கணங்கள் வேண்டும். இலக்கண நூலார் இலக்கியச் சொற்களையும் பேச்சு வழக்குச் சொற்களையும் ஆராய்ந்து சொல் இலக்கணத்தை வரன்முறைப்படுத்தியுள்ளனர். பட்டயப் பாடத்தில் சொல் வகைகள் பற்றிய அறிமுகம் உங்களுக்கு உண்டாயிற்று. இடைச்சொல் பற்றிய இந்தப் பாடம் ‘இடைச்சொல்லுக்குப்’ பொதுவான விளக்கம் தருகிறது. இடைச்சொற்கள் இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் என்ன பயனைத் தருகின்றன என்பதைத் தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட சில இலக்கண நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் சொல், சொல் வகைகள் குறித்து மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது. |