1.1 சொல் - விளக்கம் |
எழுத்து என்பது ஒலியும், வடிவும் கொண்டு விளங்குவது. எழுத்துகள் தனியாகவோ இரண்டு முதலாகச் சில எழுத்துகள் சேர்ந்தோ நின்று ஒரு பொருளைக் குறிக்குமானால் அதைச் சொல் என்கிறோம். பொருள் தராத வெறும் எழுத்தொலி சொல் ஆகாது. சொல் என்பதைப் ‘பதம்’ என்றும் நன்னூலார் குறிப்பிடுகிறார். பதவியலில் சொல்லின் அமைப்பைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.
ஒரே எழுத்தில் அமைந்து பொருள் தரும் சொற்களை ஓர்
எழுத்து ஒரு மொழி என்பர். சிறப்பான ஓரெழுத்து ஒரு
மொழிச் சொற்கள் நாற்பத்திரண்டு என்று குறிப்பிடுகின்றார்
நன்னூலார்.
ஆ (பசு), ஈ, ஏ (அம்பு), ஓ (மதகு), தா, போ முதலிய
எழுத்துகளை ஓரெழுத்துச் சொற்கள் என்பர்.
இரண்டு முதலான எழுத்துகளில் அமையும் சொற்கள்
பலவெழுத்துச் சொற்கள் ஆகும். அணி |