1.4 இடைச்சொல்லின் இலக்கணம் |
பெயர், வினை, இடை, உரி எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன்பே கண்டோம். இனி இடைச்சொல்லின் இலக்கணத்தையும் அதன் இயல்புகளையும் இலக்கண நூல்கள் வழி அறிந்து கொள்ளலாம். இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஏழாவது இயலும் (இடையியல்), நன்னூல் சொல்லதிகாரம் நான்காவது இயலும் (இடையியல்) விளக்கிக் கூறுகின்றன. பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகியவற்றை ஒட்டி
நின்று அவற்றின் பொருளைச் சிறப்பாக எடுத்துக் கூறும்
தன்மையுடையவை இடைச்சொற்கள் ஆகும். இடைச்சொற்களுக்கு என்று தனியாக வேறு ஒரு செயலும் இல்லை.
இந்தக் கருத்தைக் கூறும் நூற்பா:
இடைச்சொற்கள் பெயர், வினை என்னும் இரண்டு வகைச்
சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று
அப்பெயர், வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும்.
பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு
இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று
அழைக்கிறோம்.
|
இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து, இடைச்சொல் வினைச் சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்கும் முன்னோ பின்னோ வருவதைக் கண்டோம். |