2.1 வேற்றுமை உருபுகள் |
முதலில், இடைச்சொல் வரிசையில்
முதலாவதாகச்
சொல்லப்படும் வேற்றுமை உருபுகள் பற்றிக் காணலாம்.
வேற்றுமை என்பது வேறுபாடு. பெயர்கள் தாம் ஏற்கும்
வேற்றுமை உருபுகளுக்கு ஏற்பப் பொருள் வேறுபடும், அது
வேற்றுமை எனப்படும். வேற்றுமை உருபுகள் பெயரைச்
சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும். அவை தனித்து
வருவதில்லை.
முதல் வாக்கியத்தில் கண்ணன் பார்க்கிறான், இரண்டாவதில் கண்ணனை வேறொருவன் பார்க்கிறான். முதல் வாக்கியத்தில் கண்ணன் எழுவாய்; இரண்டாவதில் கண்ணன் செயப்படுபொருள். இந்த வேற்றுமையை உண்டாக்கியது ஐ என்னும் உருபு. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை வேற்றுமை உருபு என்று அழைக்கிறோம். இங்கு எடுத்துக்காட்டிய ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறப்படுகிறது. எஞ்சியுள்ள வேற்றுமை உருபுகள் எவ்வாறு இடைச்சொல்லாக நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பதைக் காண்போம்.
எடுத்துக்காட்டு
இவ்வாறு வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து (இறுதியில்) நின்று பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டுவதைக் கண்டோம். தமக்கென்று பொருள் இன்றித் தாம் சார்ந்த பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன. |