2.4 உவம உருபுகள் இனி, இடைச்சொல் வரிசையில் நான்காவதாக உள்ள உவம உருபுகள் பற்றிக் காணலாம். இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமைக்கும் பொருளுக்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவம உருபு என்று கூறுகிறோம். |
எடுத்துக்காட்டு மொழியின் இனிமையைச் சுட்ட விரும்பிய ஒருவன் ஒப்புமை நோக்கில் தேன் போன்ற மொழி என்று கூறும்போது மொழிக்குத் தேன் உவமை ஆகிறது. இத்தொடரில் தேன் - உவமை; மொழி - பொருள்; ‘போன்ற’ என்பது உவம உருபு. |
நன்னூல் - 366ஆம் சூத்திரம், உவம உருபுகளைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறது. போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர், நிகர், அன்ன, இன்ன என்னும் பன்னிரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகள் ஆகும் என்று கூறுகிறது. இவ்வுருபுகள் அனைத்தும் ஒப்புமைப் பொருளையே உணர்த்தி நிற்பதைக் காணலாம். எடுத்துக்காட்டு தளிர் புரை மேனி (தளிர் போலும் மென்மையான உடல்) செவ்வான் அன்ன மேனி (செவ்வானத்தைப் போன்ற சிவந்த
உடல்) |