இடைச்சொற்களுள் வேற்றுமை உருபுகள், வினை உருபுகள்
சாரியைகள், உவம உருபுகள் ஆகிய இடைச்சொற்கள் பற்றி
இப்பாடம் எடுத்துக் கூறுகின்றது. இந்நான்கு வகை இடைச்சொற்களும் செய்யுள் வழக்கிலும் பேச்சு
வழக்கிலும்
எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் இந்தப் பாடம்
விளக்கிக் காட்டுகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•
வேற்றுமை உருபுகளை ஏற்கும்
பெயர்கள் எவ்வாறு
பொருள் தெளிவினைத் தருகின்றன என்பதை அறியலாம்.
•
ஒரு வினைச்சொல்லில் விகுதியும், காலம் காட்டும்
இடைநிலையும் எவற்றையெல்லாம் குறிப்பிடுகின்றன
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
•
சொற்களைச் சார்ந்து, இயைந்து வரும் சாரியைகள் குறித்து
அறிந்து கொள்ளலாம்.