3.2 மேலும் சில இடைச்சொற்கள்

(அ) இதுவரை கண்டவை அல்லாத, பெரும்பாலும் செய்யுளில் வருகின்ற சில இடைச்சொற்களையும் அவற்றின் பொருள்களையும் சில எடுத்துக்காட்டுகளுடன் அட்டவணையிற் காணலாம்.

இடைச்
சொல்
பொருள்
எடுத்துக்காட்டு
தில்
ஆசை, காலம், ஒழிந்த சொல்லின் பொருள் (சொல்லாமல் விட்டுப் போன பொருள்)
“அரிவையைப் பெறுகதில்
அம்ம யானே” (தலைவியைப்
பெறுவேனாக என்ற ஆசையை உணர்த்துகிறது.)
மன்
ஒழிந்த சொல்லின் பொருள், ஆக்கம், கழிதற் பொருள், மிகுதிப் பொருள், நிலை பெறுதற் பொருள், இவற்றுடன் அசை நிலையாகவும் வரும்.
“கூரியதோர் வாள் மன்
இப்போது ஒடிந்து விட்டது
எனும் ஒழிந்த சொற்பொருளை
உணர்த்துகிறது.
மற்று
வினையை மாற்றுதற் பொருள், வேறு என்னும் பொருள் ஆகியவற்றைத் தரும். அசை நிலையாகவும் வரும்.
மற்றொன்று சூழினும்”
- வேறொன்று எனும்
பொருளை உணர்த்துகிறது.
மற்றை
முதலில் சொன்ன
பொருளுக்கு இனமான
பொருளைக் குறிப்பது
இரண்டு ஆடைகள் உள்ளன. ஒன்றைக் கொடுக்கும்போது
மற்றையது கொண்டுவா’
என்றால் முதலில் கண்ட
பொருளுக்கு இனமான
மற்றொரு ஆடையைக் குறிக்கும்.
கொல்
ஐயப்பொருள் தரும்
அசைநிலையாகவும்
வரும்
அவன் கண்ணன் கொல்
முருகன் கொல் - ஐயப் பொருள்.
அந்தில்
ஆங்கு
இடப்பொருள் தரும்.
அசை நிலையாகவும்
வரும்
ஆங்காங்கு ஆயினும்
ஆக”- இடப்பொருள்
அம்ம
‘கேளுங்கள்’ எனும்
பொருள் தரும்.
உரையசையாகவும்
வரும்
அம்ம வாழிதோழி” ஒன்று சொல்கிறேன், கேள் எனும் பொருள் அமைந்துள்ளது.

ஆ) மேலே காட்டப் பெற்றவை அன்றி நன்னூல் உரையாசிரியர் காட்டும் வேறு சில இடைச்சொற்களும் உண்டு. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.

1) சுட்டு, வினா = சுட்டுப்பொருளை உணர்த்தும் அ, இ, உ என்பனவும், வினாப் பொருளை உணர்த்தும் எ, ஏ, யா, ஆ, ஓ என்பனவும் இடைச்சொற்களே ஆகும்.

சுட்டு : வன், வள், வை
வினா : வன்,வன், யாது
அவளா, இவரோ

2) முன், பின் எனும் இடைச்சொற்கள் காலப் பொருளையும் இடப் பொருளையும் தருவன.

முன் பிறந்தான், பின் பிறந்தான் - காலப் பொருள்
முன் அமர்ந்தான், பின் அமர்ந்தான் - இடப் பொருள்

3) இனி எனும் சொல் கால, இடங்களின் எல்லைப் பொருளைத் தருவது.

எடுத்துக்காட்டு

இனிச் செய்வான் (காலப் பொருள்)
இனி நம் தெரு (இடப்பொருள்)
4) ஐயோ, அந்தோ
எனும் சொற்கள் :
இவை இரக்கப் பொருள் தருவன.
ஐயோ - அச்சப் பொருளும் தருவது
5)
சீ, சிச்சீ எனும்
சொற்கள்:
இவை இகழ்ச்சிப் பொருள் தருவன.