3.4 அசை நிலை

அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச் சொல்லோடும் வினைச்சொல்லோடும் சேர்த்துச் சொல்லப்படுவது. பொருள் இல்லாததாக வரும் சொல் அசைச்சொல். பேச்சுத்தொடரில் இடம்பெறும் அசைநிலையை உரையசை என்பர்.

ஏ, ஓ என்பன அசைநிலையாகவும் வரும் என முன்பு எடுத்துக்காட்டுடன் கண்டோம். ஏனைய அசைநிலை இடைச்சொற்களை இங்குக் காணலாம். (உரையசை கட்டுரையில் வரும் அசைநிலை. கட்டுரை - பேச்சு)

3.4.1 அசைநிலை இடைச்சொற்கள்
அசைநிலை
இடைச்சொல்
எடுத்துக்காட்டு
மன்
“அது மன் கொண்கன்தேரே”
மற்று
மற்று என்னை ஆள்க”
கொல்
“கற்றதனால் ஆய பயன்என் கொல்
அந்தில்
அந்தில் கழலினன் கச்சினன்”
ஆங்கு
ஆங்கத் திறனால்”
அம்ம
“அது மற்றம்ம” (பேச்சில் வரும் அசைநிலை
- உரையசை)
மா
“உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே” (மா என்னும் அசைச்சொல் வியங்கோளை அடுத்து வருவது. உப்பின்றிச் சோறு உண்க என்பது பொருள்)
தான்
நீதான் வர வேண்டும்.

மேற்காட்டிய எல்லா எடுத்துக்காட்டுகளிலும் இடைச்சொற்கள் வேறு பொருள் இன்றி அசைநிலையாக வருவதை உணரலாம்.

3.4.2 முன்னிலை அசைச்சொற்கள்

சில அசைச் சொற்கள் முன்னிலை இடத்தில் வருபவை.

மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்து இடைச்சொற்களும் முன்னிலை இடத்து வரும்.

எடுத்துக்காட்டு

கேண்மியா
கேண்மோ
கேண்மதி
கேள் என்று பொருள்

இவை எல்லாம் பழைய வழக்கு; இக்காலத்தே இவை வழக்கு ஒழிந்தன. எனினும் இலக்கியங்களில் காணலாம்.

3.4.3 எல்லா இடத்திலும் வரும் அசைச் சொற்கள்

யா, கா, பிற, பிறக்கு, போ, சின், போலும், இருந்து, இட்டு, தாம், தான், போன்ற பல அசைச்சொற்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களிலும் வரும்.

எடுத்துக்காட்டு

போலும் - மகிழ்ந்தனை போலும்
இருந்து - எழுந்திருந்தேன
தாம் - நீர்தாம்