தத்தம் பொருளை உணர்த்தி வரும் ஏ, ஓ, என முதலிய
இடைச்சொற்கள், இசைநிறை இடைச்சொற்கள், அசைநிலை
இடைச்சொற்கள், குறிப்பால் பொருள் உணர்த்தும்
இடைச்சொற்கள் ஆகியன குறித்து இப்பாடம் விளக்குகிறது.
இவ்வகை இடைச்சொற்கள் இலக்கியங்களில் பயின்று
வந்துள்ளமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்
கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•
ஏகாரம் ஓகாரம் முதலிய இடைச்சொற்கள் தத்தம்
பொருளை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்.
•
இசை நிறைக்க வரும் இடைச்சொற்கள் பற்றி அறிந்து
கொள்ளலாம்.
•
செய்யுளில் அசைநிலைச் சொற்களின் இடம் என்ன
என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
•
ஒலிக் குறிப்புச் சொற்கள் செய்யுளிலும் வழக்கிலும்
பயின்று வரும் முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.