4.6 தொகுப்புரை

இப்பாடம் உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை விளக்குகிறது. உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்றும் அவை பெயர், வினைகளைத் தழுவி வருபவை என்றும் தெரிவிக்கிறது. குணப்பண்பு, தொழிற்பண்பு எனும் பண்புகளை உணர்த்தும் தன்மை உடையவை உரிச்சொற்கள். அவ்வாறு உணர்த்தும்போது ஒரு பொருள் குறித்த பல சொல் எனவும் பல பொருள் குறித்த ஒரு சொல் எனவும் இருவகைப்படும்.

உயிர் உடைய பொருள்களின் வகைகளையும் அவற்றின் குணப்பண்புகளையும் தொழில் பண்புகளையும் தெளிவாக்கியிருக்கிறது.

உயிர் அற்ற பொருள்களின் குணப்பண்புகளையும், உயிர் உடையது மற்றும் உயிர் அற்றது ஆகிய இருபொருள்களுக்கும் பொதுவான தொழில் பண்புகளையும் இப்பாடம் விளக்கியிருக்கிறது.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)
உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகள் எத்தனை? [விடை]
2)
உயிர்ப் பொருள்களின் தொழில் பண்புகள் யாவை? [விடை]
3)
ஆறுசுவைகளும் எவ்வகைப் பொருளின் குணப்பண்புகள்? [விடை]
4)

இருபொருள்களுக்கும் பொதுவான தொழில் பண்புகள் யாவை?

[விடை]
5)
உயிர் அல்லாத பொருள்கள் எவை? [விடை]