2.1 வேற்றுமைத்
தொகை |
|||||||||||||||||||||||||||||||||
வேற்றுமை எட்டு வகைப்படும். அவை,
1) முதல் வேற்றுமை இவற்றில் முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனப்படும். எட்டாம் வேற்றுமை, விளி வேற்றுமை எனப்படும். எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமை இரண்டிற்கும் உருபுகள் இல்லை. ஏனைய ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உள்ளன. ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டு நின்றும் மறைந்து நின்றும் சொற்றொடரில் தம் பொருள் உணர்த்தும். உருபுகள் தோன்றாமல் மறைந்து நின்று சொற்றொடரில் பொருள் உணர்த்தும் தொடர்களே வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்கள் எனப்படும். வேற்றுமைகளும் அவற்றிற்குரிய உருபுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1) இரண்டாம் வேற்றுமை - ஐ
தொகை என்பது
உருபு மறைதல் என்பதால்
தொகைநிலைத் தொடரில் வேற்றுமைத் தொகை என்பது
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள
ஆறு வேற்றுமைத் தொகைகளையே குறிக்கும்.
இரண்டு முதலாம் இடைஆறு உருபும் இவ்வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்,
வேற்றுமை உருபு
மட்டும் மறைந்து வருதல், வேற்றுமை உருபும் பயனும் சேர்ந்து
மறைந்து வருதல் என இரண்டு வகைப்படும்.
ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை. |