வேற்றுமைத்
தொகை, பண்புத் தொகை, வினைத்தொகை, உவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம்
விலக்கி நிற்குமானால் அம்முன்மொழிகளில் பொருள் சிறக்கும்.
(எ-டு.)
வேங்கைப்பூ - வேற்றுமைத் தொகை
வெண்டாமரை- பண்புத் தொகை ஆடுபாம்பு - வினைத் தொகை வேற்கண் - உவமைத் தொகை
முதல் தொடர் ஆறாம் வேற்றுமைத் தொகையாகும். பல
வகைப் பூக்களில் தன் இனம் பலவற்றையும் விலக்கி வேங்கை மரத்தின் பூவை மட்டும்
குறிப்பதால் முன்மொழியில் பொருள் சிறக்கிறது.
இரண்டாவது தொடரில் பல வகைத் தாமரைகளில்
ஓர்
வகையை மட்டும் குறித்துத் தாமரைப் பூவின்
ஏனைய
இனங்களை விலக்கியமையால் முன் மொழியில் பொருள்
சிறக்கிறது.
இவ்வாறே வினைத்தொகை, உவமைத் தொகைகளிலும்
முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால் அம்மொழிகளில்
பொருள் சிறந்தது.
|