|
தொகைமொழித்
தொடர்கள் ஒரு பொருளை
மட்டும் குறித்து வருமானால் பொருள் மயக்கம் ஏற்படாது
தொகைநிலையில் வரும்பொழுது, மொழிச்சூழலாலும், விரித்துப்
பொருள் காண்போரின் பொருள் கொள்ளும் நிலையினாலும்
பலபொருள்பட்டுப் பொருள் மயக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு
தொகையை விரித்துப் பொருள் கொள்ளும்போது கீழ்
எல்லையாக இரண்டு பொருளும், மேல் எல்லையாக ஏழு
பொருள் வரையிலும் தொகைநிலைத் தொடர், பொருள் மயங்க
நிற்கும்.
(எ-டு)
அ) தெய்வ வணக்கம் |
- |
இரண்டு பொருள் |
1) தெய்வத்தை வணங்கும் வணக்கம் |
- |
இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகை. |
2) தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம் |
- |
மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகை. |
ஆ) தற்சேர்ந்தார் |
- |
மூன்று பொருள் |
1) தன்னைச் சேர்ந்தார் |
- |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
2) தன்னொடு சேர்ந்தார் |
- |
மூன்றாம் வேற்றுமைத் தொகை |
3) தன்கண் சேர்ந்தார் |
- |
ஏழாம் வேற்றுமைத் தொகை |
இ) சொல்லிலக்கணம் |
- |
நான்கு பொருள் |
1) சொல்லினது இலக்கணம் |
- |
ஆறாம் வேற்றுமைத் தொகை |
2) சொல்லுக்கு இலக்கணம |
- |
நான்காம் வேற்றுமைத் தொகை |
3) சொல்லின்கண் இலக்கணம் |
- |
ஏழாம் வேற்றுமைத் தொகை |
4) சொல்லினது இலக்கணம்
சொன்ன நூல் |
- |
அன்மொழித் தொகை |
ஈ) பொன்மணி |
- |
ஐந்து பொருள் |
1) பொன்னலாகிய மணி |
- |
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (கருவிப் பொருள்) |
2) பொன்னாகிய மணி |
- |
பண்புத் தொகை |
3) பொன்னின்கண் மணி |
- |
ஏழாம் வேற்றுமைத் தொகை |
4) பொன்னோடு சேர்ந்த
மணி |
- |
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (உடனிகழ்ச்சிப் பொருள்)
|
5) பொன்னும் மணியும் |
- |
உம்மைத் தொகை |
(உ) மர வேலி |
- |
ஆறு பொருள் |
1) மரத்தைக் காக்கும்
வேலி |
- |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
2) மரத்தாலாகிய வேலி |
- |
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
3) மரத்திற்கு வேலி |
- |
நான்காம் வேற்றுமைத் தொகை |
4) மரத்தினது வேலி |
- |
ஆறாம் வேற்றுமைத் தொகை |
5) மரத்தின் புறத்தில்
வேலி |
- |
ஏழாம் வேற்றுமைத் தொகை |
6) மரமாகிய வேலி |
- |
பண்புத் தொகை |
(ஊ) சொற்பொருள் |
- |
ஏழு பொருள் |
1) சொல்லால் அறியப்படும் பொருள |
- |
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
2) சொல்லினது பொருள் |
- |
ஆறாம் வேற்றுமைத் தொகை |
3) சொல்லுக்குப் பொருள் |
- |
நான்காம் வேற்றுமைத் தொகை |
4) சொல்லின் கண்
பொருள் |
- |
ஏழாம் வேற்றுமைத் தொகை |
5) சொல்லும் பொருளும் |
- |
உம்மைத் தொகை |
6) சொல்லாகிய பொருள் |
- |
பண்புத் தொகை |
7) சொல்லானது பொருள் |
- |
எழுவாய்த் தொடர் |
தொக்குழி மயங்குந இரண்டு முதலேழ்
எல்லைப் பொருளின் மயங்கும் என்ப
(நன்னூல் - 373)
|