தொகாநிலைத் தொடர் என்பது சொற்கள், வேற்றுமை, அல்வழிப் பொருளில்,
உருபுகள் இருந்து மறையாமலும், உருபுகளே இல்லாமலும் தொடரும் தொடராகும்.
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என்பது, வேற்றுமைக்கு
உரிய உருபுகள் மறையாமல்
வெளிப்பட்டுத்
தொடரும் தொடராகும்.
அல்வழித் தொகாநிலைத் தொடர்
என்பது, அல்வழிக்கு உரிய தொகைகளான வினைத்
தொகை, பண்புத் தொகை,
உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித்
தொகை ஆகியன நீங்கலாக,
தமக்கெனத் தனி
உருபுகள் இல்லாத ஏனைய தொகாநிலைத் தொடர்கள் தொடரும் தொடராகும். இத்தொகாநிலைத்
தொடர் ஒன்பது வகைப்படும்.
அவை,
(1)
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
(2)
எழுவாய்த் தொடர்
(3)
விளித் தொடர்
(4)
வினைமுற்றுத் தொடர்
(5)
பெயரெச்சத் தொடர்
(6)
வினையெச்சத் தொடர்
(7)
இடைச் சொற்றொடர்
(8)
உரிச் சொற்றொடர்
(9)
அடுக்குத் தொடர்
வேற்றுமைத் தொடர்களில், உருபு விரிந்தவிடத்து
வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்; வினைத்தொகை விரிந்தவிடத்து பெயரெச்சத் தொடராகும்; பண்புத்தொகையும்
உம்மைத்தொகையும் விரிந்தவிடத்து இடைச் சொற்றொடராகும்;
உவமைத் தொகைவிரிந்தவிடத்து முன்னது
இடைச்
சொற்றொடராகும்; பின்னது இடைச்சொல்லடியாகப் பிறந்த
பெயரெச்ச வினையெச்சத் தொடராகும். அன்மொழித் தொகை
விரிந்தவிடத்து வேற்றுமை முதலிய தொகாநிலைத் தொடர் முதல்
ஏற்பனவாகும்.
(எ.டு.)
பால் குடித்தான் |
- |
வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் |
பாலைக் குடித்தான் |
- |
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
வாழ் மனை |
- |
வினைத் தொகை |
வாழ்ந்த மனை
வாழ்கிற மனை வாழும் மனை |
- |
பெயரெச்சத் தொடர் |
செந்தமிழ் |
- |
பண்புத்தொகை |
செம்மை ஆகிய தமிழ் |
- |
இடைச் சொற்றொடர் |
பால் பழம் |
- |
உம்மைத் தொகை |
பாலும் பழமும் |
- |
இடைச் சொற்றொடர் |
தாமரைக் கண் |
- |
உவமைத் தொகை |
தாமரை போன்ற கண் |
- |
உவமை விரி |
தாமரை போன்ற |
- |
இடைச் சொற்றொடர் |
போன்ற கண் |
- |
இடைச் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சத்தொடர்
|
கார்குழல் |
- |
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை |
கார் போன்ற குழலை உடைய பெண் |
- |
உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை பெண் என்னும்
முதல் கொண்டு முடிந்தது. |
முற்றுஈர் எச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுஉருபு இடைஉரி அடுக்குஇவை தொகாநிலை
(நன்னூல் : 374)
|