விடையில்
இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறுபட்டு வரும் விடைத்தொடர்கள் விடை வழுநிலைத் தொடர்கள் எனப்படும்.
(எ.டு. ) இது மகள்
இது பறவைகள் முதல் தொடரில் எழுவாய் ‘இது’
அஃறிணைச் சுட்டுப் பெயர்; ‘மகள்’ என்னும் பெயர்ப்
பயனிலை உயர்திணைக்கு உரியதாகும். இரண்டாம்
தொடரின் எழுவாய் ‘இது’ ஒன்றன்பால்; ‘பறவைகள்’ என்னும் பெயர்ப் பயனிலை பலவின்பால். இவ்வாறு ஒரு விடைத் தொடரில் திணை மயங்கி வருவதும், பால் மயங்கி வருவதும் விடை வழுநிலை ஆகும். இதேபோல்
ஒரு விடைத் தொடரில் முதலும் சினையும் கலந்து (மயங்கி) வருவதும் கூடாது. மயங்கி வருமானால் வழுவாகும்.
(எ.டு.) மரம் முறிந்தது; கிளை
முறிந்தது. இத்தொடரில் மரம் முறிந்ததோ? மரத்தின் கிளை
முறிந்ததோ?
என்னும் ஐயம் எழுவதால் இவ்வாறு கூறுதல்
விடை
வழுவாகும்.
வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல்
(நன்னூல் : 387)
|