1.6 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் பழந்தமிழகத்தின் இயற்கை அமைப்பினைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

சங்ககாலத்திற்கு முற்பட்ட தமிழகத்தின் நிலப்பரப்பு எவ்வாறு இருந்தது, அது சங்ககாலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், பிற்காலத்தில் தமிழகத்தின் இயற்கை அமைப்பு எவ்வாறெல்லாம் மாற்றம் அடைந்தது என்றும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.

பழங்காலத் தமிழகத்தில் என்னென்ன ஆறுகள் பெருகி ஓடின என்றும், இன்று அவ்வாறுகளின் நிலை என்ன என்றும் படித்து உணர்ந்திருப்பீர்கள். என்னென்ன மலைகள் பழந்தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன என்பது பற்றி அறிந்து கொண்டீர்கள். அன்று வாழ்ந்த மக்கள் திணை நில அடிப்படையிலான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டீர்கள். அந்தந்த நில அமைப்புகளுக்கேற்ப அவர்கள் வேளாண்மை, தச்சுவேலை, வேட்டையாடுதல், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில், முத்துக்குளித்தல், உப்பு வாணிபம் போன்ற தொழில்களைக் கொண்டிருந்தனர் எனவும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
தற்போதுள்ள சேலத்தின் அருகே அமைந்துள்ள மலை யாது?
2.
கல்ராயன் மலை எந்த மாவட்டங்களுக்கு இடையில் உள்ளது?
3.
பச்சைமலைக்கு ஏன் அப்பெயர் வந்தது?
4.
தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் எதனைக் கங்கை ஆற்றிற்கு ஒப்பாகக் கூறுகின்றனர்?
5.
காவிரி ஆறு எந்த மலையில் தொடங்குகிறது?
6.
நந்தி துர்க்கத்தில் தோன்றும் ஆற்றின் பெயர் என்ன?
7.
தமிழகத்தில் பாயும் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகத் தென்பெண்ணை ஆற்றைக் கூறும் கவிஞர் யார்?
8.
பழனி மலையில் தோன்றும் ஆறு எது?
9.
வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஆறு யாது?
10.
‘பாண்டியன் அணை’ எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
11.
எந்தெந்தப் பொருட்கள் பழந்தமிழகத்திற்கு அந்நியச் செலாவணியைத் தேடித்தந்தன?
12.
தமிழகத்தில் வீசும் இரு பருவக்காற்றுகள் யாவை?