3.4 நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் வரலாற்றிற்கு முந்தைய காலத்துத் தமிழக வரலாற்றை நாகரிகத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாறுதல்களையும், பயன்படுத்திய கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டு நான்கு காலங்களாக வகைப்படுத்தலாம். அவையாவன: 1. பழங்கற்காலம், 2. இடைக் கற்காலம், 3. புதிய கற்காலம், 4. இரும்புக் காலம் இவற்றை வரையறை செய்யத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ள புதைபொருட் சின்னங்கள் உதவுகின்றன. இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய அகழ்வாராய்ச்சிகளில் ஒன்று ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த புதைபொருட்கள் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. அணிகலன்கள், இரும்பாலாகிய கருவிகள், உரல்கள், மனித எலும்புக் கூடுகள் போன்றன இவற்றுள் அடங்கும். பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள்
பல மேலும் பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவில்லை. பழங்கற்காலத்துக்கும் புதிய கற்காலத்திற்குமிடையே
இடைக்கற்காலம் புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) என்ற ஒரு வகைக் கல்லினால் செய்யப்பட்டுள்ளன. கற்களால் உளிகள், சம்மட்டிகள் போன்றவைகளை ஒழுங்காகச் செதுக்கி அவற்றிற்கு மெருகூட்டியுள்ளனர் என்பது திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது தெரிய வந்தது. இவர்கள் ஆங்காங்குக் குடியேறி நிலையான வாழ்க்கையில் அமர்ந்துவிட்டனர். இக்கற்காலத்தில்தான் மனிதன் நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டுள்ளான் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆடைகளை நெய்துள்ளனர். ஆடு, மாடுகளை வளர்த்துள்ளனர். குறிப்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வாழ்க்கை வசதிக்கான பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எடைக்கற்கள், அம்மி, குழவிகள், கற்சட்டிகள் இவற்றுள் அடங்கும். இவர்களிடம் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் காணப்பட்டது. தமிழகத்தில் புதிய கற்காலத்தைத் தொடர்ந்து இரும்புக் காலம் தொடங்கிற்று. ஆனால் வட இந்தியாவில் புதிய கற்காலத்தை அடுத்துச் செம்புக் காலம் தொடங்கிற்று. அதனை அடுத்தே அங்கு இரும்புக் காலம் தொடங்கியது. புதிய கற்காலத்துக்கும் இரும்புக் காலத்துக்கும் இடையில் செம்பு அல்லது வெண்கலக்காலம் ஒன்று தமிழகத்தில் நிகழாதது வியப்பாக உள்ளது. இந்நிலைக்கு இருவேறு காரணங்கள் காட்டப்படுகின்றன. ஒன்று, மக்கள் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்குக் குடிபெயர்ந்து வந்தபோது, முதன்முதலாக இரும்பைத் தம்முடன் கொண்டு வந்திருக்கலாம். மற்றொன்று, தமிழகத்தில் புதிய கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்த மக்கள் இரும்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். இவற்றுள் இரண்டாம் காரணமே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. மண்பாண்டங்கள் செய்வதற்குத் தகுதியான மண்ணைத் தேடியபோது, பலவகையான மண்ணையும், பாறைகளையும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள். பச்சை மண்பாண்டங்களைச் சூளையில் இட்டுச் சுட்டிருப்பார்கள். அப்போது அவர்கள் தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்திருக்கலாம். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர்
என்னும் இடத்தில் |