4.6 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் அயலகத் தொடர்பால் தமிழகத்தில் எவ்வாறு எல்லாம் மாற்றங்கள் நடைபெற்றன என்பதைப் படித்து அறிந்திருப்பீர்கள்.

தமிழர்கள் மேலை நாட்டாருடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செழிப்பாக வாழ்ந்தது பற்றிப் படித்திருப்பீர்கள்.

பண்டைய தமிழர்கள் கீழை நாட்டாருடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததைப் படித்து உணர்ந்தீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வட இந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் ஆரியர் தமிழகத்துள் நுழைந்ததும், அவர்களால் மொழியிலும், இலக்கியத்திலும், சமூக வாழ்விலும், சமயக் கோட்பாட்டிலும் சொல்ல முடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றியும் நன்கு படித்து அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
வட இந்தியர் என்று கூறப்படுபவர் யார்?
2.
பாண்டிய நாட்டு முத்துக்களைப் பற்றி எழுதியவர் யார்?
3.
கௌடில்யர் எழுதிய நூலின் பெயர் என்ன?
4.
பருத்தி நெசவில் பெயர் பெற்று விளங்கிய ஊர் எது?
5.
சர்க்கரையின் பெயர் என்னவென்று மாறியது?
6.
ஆரியரால் தமிழகத்தில் எவற்றில் மாற்றங்கள் நிகழ்ந்தன?
7.
ஆரிய, தமிழ்மொழி கலப்பினால் ஏற்பட்ட மொழி யாது?
8.
கிரந்த எழுத்துகள் எதற்காகத் தோன்றின?
9.
பண்டைய தமிழரின் கடவுளர் யார்?
10.
குண்டூரில் கிடைத்த கல்வெட்டின் பெயர் யாது?