5.7 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் சங்க காலத்தில் தமிழகம் மூவேந்தர்களால் அரசாட்சி செய்யப்பட்டு வந்தது என்பதைப் பற்றிப் படித்து உணர்ந்திருப்பீர்கள். சங்க கால மன்னர்கள் வடதிசை நோக்கிச் செல்லும்போதெல்லாம் எதிர்கொண்ட வட இந்திய மன்னர்களை வென்று இமயம் வரை சென்றனர் என்பது பற்றிப் படித்தீர்கள். சங்க கால மன்னர்கள் சிறந்த ஆற்றல் பெற்றவர்கள் என்றும், போரிலும், கொடையிலும் புலமையிலும் சிறப்புற்றிருந்தனர் என்றும் அறிந்திருப்பீர்கள்.

மூவேந்தர்கள் மட்டுமன்றிக் குறுநில மன்னர்களும், வேளிர்களும் தமிழகத்தே ஆட்சி புரிந்து வந்தனர் என்றும் படித்து அறிந்தீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
பாண்டிய மன்னர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
2.
பாண்டியர் மதுரையைத் தலைநகராகக் கொள்வதற்கு முன் எந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனர்?
3.
மதுரையின் வேறு பெயர் என்ன?
4.
சங்க காலப் பாண்டிய மன்னர்களுள் காலத்தால் முற்பட்டவன் யார்?
5.
ஏழு மன்னர்களை ஒரே நேரத்தில் போரில் சந்தித்த பாண்டிய மன்னன் யார்?
6.
வேங்கை மார்பனை வெற்றி கொண்ட மன்னன் யார்?
7.
வேளிர் எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தனர்?
8.
முல்லைக்குத் தேர் வழங்கிய வள்ளல் யார்?
9.
ஔவையாரின் சிறந்த நண்பனாக விளங்கிய அரசன் யார்?
10.
தகடூர் மீது படையெடுத்து வெற்றி கொண்ட மன்னன் யார்?