1.8 தொகுப்புரை

இப்பாடத்தின் வாயிலாகக் களப்பிரர் யார் என்பது பற்றியும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும் அறிஞர்களிடையே நிலவும் பல்வேறு கருத்துகளை விளக்கமாக அறிந்து கொண்டீர்கள். களப்பிரர் தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிப் பழைய மரபுகளை அழித்தனர் என்பது பற்றி அறிந்து கொண்டீர்கள்.

களப்பிரர் சமண சமயத்தையும், பௌத்த சமயத்தையும் சார்ந்து இருந்தனர் என்பது பற்றி அறிந்து கொண்டீர்கள். களப்பிரர் காலத்தில் பல்வேறு சமயங்கள் நிலவினாலும், எந்த ஒரு சமய பூசலும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டீர்கள்.

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும், இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்பதனை விளங்கிக் கொண்டீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
களப்பிரர் காலத்தில் பாண்டிய நாட்டில் உயர்வடைந்திருந்த சமயம் எது?
2.
களப்பிரர் காலத்தில் பௌத்த சமயத்திற்குப் பெயர் பெற்று விளங்கிய ஊர் எது?
3.
மதுரையில் திராவிட சங்கத்தை நிறுவியவர் யார்?
4.
இரட்டைக் காப்பியங்கள் யாவை?
5.
களப்பிரர் காலத்தில் தோன்றிய நீதிநூல்கள் எத்தனை?
6.
பதினெண் கீழ்க்கணக்கில் புறப்பொருள் சார்ந்த நூல் எது?
7.
திருமூலர் பாடிய நூலின் பெயர் யாது?
8.
அற்புதத் திருவந்தாதியைப் பாடியவர் யார்?
9.
முதல் ஆழ்வார்கள் யார்?
10.
களப்பிரர் காலத்தில் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடிய நூல் எது?