2.0 பாட முன்னுரை

இப்பாடம் பல்லவர்கள் யார்? எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்? என்பன பற்றிய செய்திகளை விரிவாக விளக்குகின்றது. மேலும் இப்பல்லவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களா? இல்லை வட இந்தியாவில் தோன்றியவர்களா? இல்லை தமிழகத்தைச் சார்ந்தவர்களா? என்பன பற்றிய கருத்துகளையும் விளக்குகின்றது.

இப்பல்லவர்களைப் பற்றிய சான்றுகளை இலக்கியச் சான்றுகள், நினைவுச் சின்னங்கள், பட்டயங்களும் கல்வெட்டுகளும், அயல்நாட்டுச் சான்றுகள் என்ற நான்கு வகையாகப் பிரித்து விளக்குகிறது.

பல்லவ மன்னர்களை முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என்று மூவகையாகப் பிரித்து விளக்குகிறது. இப்பல்லவர்களில் யார் யார் சிறந்து விளங்கினார்கள் என்பது பற்றியும் விளக்குகின்றது.

மேலும் இப்பாடம் பல்லவ மன்னர்கள் அண்டை நாட்டாருடன் எப்போதும் போர் புரிந்தனர் என்பது பற்றியும் விளக்குகின்றது.