களப்பிரர்கள்
ஆட்சியை நீக்கி, தமிழகத்தில் பாண்டிய மன்னன் கடுங்கோன் பாண்டியர்
ஆட்சியை நிலைநாட்டினான். இம்மன்னனின் வழிவந்தோர் முற்காலப் பாண்டியர்
எனக் கூறப்படுகின்றனர். இவர்களின் ஆட்சி, போர்கள், சமயம் போன்றவைகளைத்
தெளிவாக விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
இப்பாடத்தின் வாயிலாக முற்காலப் பாண்டியர்களைப் பற்றியும்.
அவர்களின் சமய நிலை பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.
முற்காலப் பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டை விரிவுபடுத்த
வேண்டும் என்று எண்ணிப் பல்லவர், சேரர், சோழர் போன்றோருடன்
போரிட்டதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் ஈழத்துடனும்
போரிட்டனர் என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
முற்காலப் பாண்டியர் வரலாற்றை அறிவதற்கு வேள்விக்குடிச்
செப்பேடு பெரிதும் துணைபுரிகின்றது என்ற செய்தியும்
அறிய முடிகிறது.