6.8 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் சோழப் பேரரசின் நிருவாக முறை எவ்வாறு இருந்தது என்றும், அந்நிருவாகத்திற்காக அரசர்கள் நாட்டினை எவ்வாறு பிரித்து ஆட்சி நடத்திவந்தார்கள் என்றும் நன்கு அறிந்திருப்பீர்கள். ஆட்சியை மேற்கொள்வதற்காக ஊர்ச்சபைகள் இருந்தன என்றும், அச்சபைகளுக்கு உறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுத்தப்பட்டார்கள் என்றும் படித்துணர்ந்திருப்பீர்கள். நாட்டின் பொருளாதார நிலை, கலை - இலக்கிய வளர்ச்சி, சமய நிலை ஆகியவற்றைப் பற்றியும் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பற்றியும் நன்கு படித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
சோழர் காலத்தில் தோன்றிய சமண சமயப் பெருங்காப்பியங்கள் யாவை?
2.
சோழர் காலத்தில் தோன்றிய ஐஞ்சிறு காப்பியங்களுள் சிறந்தது எது?
3.
சோழர் காலத்தில் தொகுக்கப்பட்ட வைணவ நூல் யாது?
4.
சோழர் காலத்தில் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல் யாது?
5.
பிற்காலச் சோழர் காலத்துக் கோயில்களின் வரிசையில் எந்தெந்த இடங்களில் உள்ள கோயில்கள் குறிப்பிடத்தக்கன?
6.
சிற்பிகள் எவற்றில் சிற்பங்களைச் செதுக்கினர்?
7.
சோழர் காலத்தில் இருந்த இருபெரும் இந்துமதப் பிரிவுகள் யாவை?
8.
சோழர் காலத்தில் சமணப் பள்ளி எங்கு அமைந்திருந்தது?
9.
சம்புவராயர்கள், யாதவராயர்கள் யார்?