1.0 பாட முன்னுரை

இப்பாடம் பிற்காலப் பாண்டியர் யார் என்பதை விளக்குகிறது. பிற்காலப் பாண்டிய மன்னர்களைப் பற்றியும், அவர்கள் பாண்டிய நாட்டு எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகளோடு செய்த போர்கள் பற்றியும், அப்போர்களில் அடைந்த வெற்றி தோல்விகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறுகிறது. பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் பாண்டிய நாடு இசுலாமியப் படையெடுப்பிற்கு உட்பட்டு அல்லலுற்ற நிலைமையை விரிவாக விளக்கிக் கூறுகிறது. பிற்காலப் பாண்டிய மன்னர்கள் கோயில்களுக்குச் செய்த அறப்பணிகள் பற்றியும், அயல்நாட்டாருடன் கொண்ட தொடர்பு பற்றியும் கூறுகிறது. கடல் கடந்த மேலை நாடுகளில் இருந்து பாண்டிய நாட்டிற்கு வந்த மார்க்கோ போலோ, வாசாப் ஆகியோர் பாண்டிய நாடு பற்றியும், பாண்டிய மன்னர்கள் பற்றியும் எழுதியுள்ள குறிப்புகளை எடுத்துக் காட்டுகின்றது.