1.6 அயலவர் குறிப்பு மார்க்கோ போலோ மற்றும் வாசாப் போன்றோர் பாண்டிய நாட்டினைப் பற்றி விரிவாகத் தங்களது குறிப்பில் எடுத்துக் கூறியுள்ளனர். வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ
என்பவன் வாசாப் என்பார் பாரசீக நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஆவார். இவரும் முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆட்சியின்போது பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தவர் ஆவார். இவர் தரும் செய்திகள் மிகவும் சிறப்பானவை. அவர் கூறுவதாவது: “மலைகள் போன்ற மிகப் பெருங்கப்பல்கள் கடல் மேல் காற்றெனும் சிறகுகளை விரித்து, பாண்டி நாட்டுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இவை சீனம், கான்டன், இந்து, சிந்து ஆகிய இடங்களிலிருந்து அரிய பண்டங்களை ஏற்றிக்கொண்டு வந்து குவிக்கின்றன; பாரசீக வளைகுடாவின் மேல் உள்ள தீவுகள், துருக்கி, ஈராக், குராசான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் செல்வங்கள், பாண்டி நாட்டினின்றும் பெற்றவையாம். காலேஸ் தேவருடைய (மாறவர்மன் குலசேகரபாண்டியன்) ஆட்சியும், நாட்டு வளமும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்துள்ளன. இவ்வாட்சிக் காலத்தில் அந்நிய நாட்டு மன்னரின் படையெடுப்பு ஒன்றேனும் நிகழ்ந்ததில்லை. பாண்டிய மன்னனும் ஒரு முறையேனும் நோய்வாய்ப்பட்டிலன். மதுரை அரசு பண்டாரத்தில் ஆயிரத்து இருநூறு கோடி பொன் சேர்ப்புக் கட்டி வைக்கப்பட்டுள்ளது. அஃதன்றி முத்து, மாணிக்கம், நீலம், பச்சை போன்ற நவரத்தினங்கள் அங்குக் குவிந்து கிடக்கின்றன. மேலும் விளக்குவதற்குச் சொற்கள் இல”. பாண்டிய மன்னன் ஒருவனின் அமைச்சரவையில் அரபு வணிகர்கள் அமர்ந்திருந்தனர் என்றும், சுங்க அமைச்சர் பொறுப்பு அப்துல் ரஹிமான் என்ற இஸ்லாமியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததென்றும் முஸ்லீம் வரலாறுகள் கூறுகின்றன. |