1.7 தொகுப்புரை இப்பாடத்தின் மூலம் பிற்காலப் பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைத் தங்களுக்கு அடங்கி நடக்கும் சிற்றரசர்களாக்கி, அவர்களிடமிருந்து திறை வாங்கினார்கள் என்பது பற்றி விளக்கமாக அறிந்திருப்பீர்கள். பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் புகழில் மிகவும் ஓங்கியவன் என்பதை விளக்கமாக அறிந்திருப்பீர்கள். பிற்காலப் பாண்டியர் இறைநலமும் மக்கள் நலமும் கருதிச் செய்த அறப்பணிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்திருப்பீர்கள். பிற்காலப் பாண்டியர் அயல் நாட்டாருடன் கொண்ட வாணிகத்தொடர்பு பற்றியும், வெனிஸ் நாட்டுப் பயணியான மார்க்கோ போலோ என்பவனும், பாரசீக நாட்டு வரலாற்றாசிரியர் வாசாப் என்பவரும் இவர்களின் ஆட்சியின் போது தமிழகம் வந்து பல குறிப்புகளைத் தந்துள்ளனர் என்பது பற்றியும் இப்பாடத்தின் மூலம் படித்து உணர்ந்திருப்பீர்கள்.
|