2.0 பாட முன்னுரை

இப்பாடத்தில் பிற்காலப் பாண்டியரின் நிலை என்ன என்பது பற்றியும், அவர்களின் ஆட்சியே 13ஆம் நூற்றாண்டில் மேலோங்கி இருந்தது என்பது பற்றியும் காண இருக்கிறோம். நிருவாகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பது பற்றியும் காண இருக்கிறோம்.

சமுதாயத்தில் சாதிப் பாகுபாடு தலைவிரித்தாடியது என்பது பற்றி அறிகிறோம்.

மன்னர்கள் கோயில்களுக்குப் பல உதவிகளைச் செய்துவந்தனர் என்பதையும், தேவரடியார்கள் என்போர் கோயிலில் தங்கி இருந்தார்கள் என்பதையும், அவர்கள் அங்கேயே தங்கி நடனமாடியும், இசைபாடியும் இறைத்தொண்டில் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் அறிய இருக்கின்றோம்.

கல்வி வளர்ச்சியுற்றிருந்தது என்றும், பொருளாதாரம், தொழில்கள் மூலமும், வாணிபத்தின் மூலமும் 13ஆம் நூற்றாண்டின் நிலை உயர்ந்திருந்தது என்றும் அறிகிறோம். சிற்பக்கலை, நடனக்கலை, நாடகக்கலை போன்றவை சிறப்புப் பெற்றிருந்தன என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.