2.5 சமய நிலை

13ஆம் நூற்றாண்டில் பல்வேறு சமயப் பிரிவினரிடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மோதல்கள் ஏற்பட்டன. தினமும் வழிபாடு செய்வதில் போட்டி ஏற்பட்டது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் இந்துக்கள் கோயில்களையும் உடமைகளையும் குறிவைத்துத் தாக்கியதால் இந்து (சைவ, வைணவ) மக்களிடையில் மனக்குமுறல் ஏற்பட்டது.

கோயில்களும், பிராமணர்களும் பெற்றிருந்த தேவதான நிலங்களும், பிரமதேய நிலங்களும் கைப்பற்றப்பட்டதால் இந்து மக்களிடையில் இசுலாமிய சமயத்தின் மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. இச்சூழ் நிலையிலும் கூட இந்து சமயம் வளர்ச்சியைக் கண்டது என்பதில் ஐயமில்லை. கோயில்கள் எழுப்பப்பட்டது மட்டுமேயன்றிச் சமய இலக்கியங்களும் தோன்றின.