2.6 தொகுப்புரை

13ஆம் நூற்றாண்டின் அரசியல் நிலை எவ்வாறு இருந்தது என்பதனை நினைவு கூர்ந்து பார்த்தோம்.

பிற்காலப் பாண்டியர்கள் இக்காலத்தில் ஆட்சியில் உயர்ந்து காணப்பட்டனர். கோயில்களுக்குப் பல உதவிகளைச் செய்தார்கள்.

பெண்களும், ஆண்களும் சமமாக மதிக்கப்பட்டனர். கலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. இவற்றைப் பற்றிச் சான்றுகளுடன் கற்று அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
பொன், கழஞ்சு, காணம் என்பன யாவை?
2.
புலஸ்திய முனிவரின் சிற்பம் எங்குள்ளது?
3.
இருவகைக் கூத்துகள் யாவை?
4.
ஏதேனும் இரு இசைக்கருவிகளின் பெயர்களைக் கூறுக.
5.
பிற்காலப் பாண்டியர் காலத்தில் சமய இலக்கியங்கள் தோன்றினவா?