3.0 பாட முன்னுரை

இப்பாடத்தில், தமிழகத்தில் ஏற்பட்டிருந்த வாரிசு உரிமைப் போரினைப் பயன்படுத்தி இசுலாமியர் தமிழகத்தின் மீது படையெடுப்பினை நடத்தினர் என்பது பற்றிக் காண இருக்கிறோம்.

இசுலாமிய மதத்தைப் பரப்புவதே அவர்களின் கடமை என்ற காரணத்தாலும் தமிழகத்தின் மீது படையெடுத்தனர் என்பது பற்றியும் காண இருக்கிறோம்.

இந்துக்கள் கோயில்களில் அளவற்ற செல்வங்கள் குவிந்து இருந்தன என்றும், அவற்றைச் சூறையாடித் தங்களது நாட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றும் நினைத்துப் படையெடுத்தனர் என்பதை அறிய இருக்கிறோம்.

சில மன்னர்கள் திறை செலுத்தவில்லை என்ற காரணம் காட்டி, அந்நாட்டின் மீது படையெடுப்பு நடத்தினர் என்பதையும் அறிய இருக்கிறோம்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் டெல்லியிலும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இக்குழப்பத்தைப் பயன்படுத்தி, இரண்டாம் பிரதாபருத்திரன் என்பவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டான். இதனைக் கண்டு பொறாமை கொண்ட டெல்லி அரசன் கியாசுதீன் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்தான் என்பன போன்றவற்றை அறிய இருக்கிறோம்.