4.5 தொகுப்புரை

இப்பாடத்தைப் படித்தபின் நீங்கள் நாயக்க மன்னர்கள் யார் என்பதையும், அவர்கள் எவ்வாறு எழுச்சியுற்று, எவ்வாறு தன்னாட்சி புரிந்து வந்தனர் என்பது பற்றிய செய்திகளையும் அறிந்திருப்பீர்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் ஆகிய இடங்களில் நாயக்க மன்னர்கள் நன்கு ஆட்சி புரிந்து வந்தனர் என்ற செய்தியைப் படித்து உணர்ந்திருப்பீர்கள். நாட்டின் நிர்வாகத்திற்குச் சுலபமான வழிமுறையான பாளையப்பட்டு முறையினை மதுரை நாயக்கர் புகுத்தினர். மற்றும் கோயில்களுக்கு அறப்பணிகளைச் செய்தனர் போன்றவைகளையும் படித்து உணர்ந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
தஞ்சையில் எத்தனை ஆண்டுக் காலம் நாயக்கர் ஆட்சி இருந்தது?
2.
விசய நகரப் பேரரசின் மீது எந்தெந்த சுல்தான்கள் படையெடுப்பு நடத்தினர்?
3.
தலைக்கோட்டைப் போரில் கொல்லப்பட்ட விசயநகரப் பேரரசர் யார்?
4.
செவ்வப்ப நாயக்கரின் மகன் யார்?
5.
விசயராகவ நாயக்கரிடம் பெண் கேட்டுப் போர் புரிந்த மதுரை நாயக்கர் யார்?
6.
ஏசு சபையினர்க்கு மாதா கோயில் உரிமை வழங்கியவர் யார்?
7.
சலகண்டேசுவரர் கோயிலைக் கட்டியவர் யார்?