5.7 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் நாயக்க மன்னர் எவ்வாறு ஆட்சி புரிந்தார்கள் என்பது பற்றிய விளக்கங்களை அறிந்திருப்பீர்கள். நாயக்க மன்னர்கள் தெலுங்கர்களாக இருந்தாலும் கூட, பண்டைத்தமிழ் மன்னர்களின் ஆட்சிப் பாதையிலே நடந்து சென்றுள்ளனர் என்பதையும் படித்து உணர்ந்திருப்பீர்கள். நாயக்கர் ஆட்சியில் நீதி முறை, வரி விதிப்பு முறைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள். நாயக்கர் காலத்தில் சமுதாய வாழ்க்கை, சமுதாயத்தில் ஆடவர், மகளிரின் நிலைப்பாடு, சமய வாழ்க்கை, கல்வி நிலை ஆகியவற்றைப் பற்றியும் படித்து அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
நாயக்க மன்னர்கள் விதித்த ஏதேனும் மூன்று வரிகளைக் கூறுக.
2.
நாயக்க மன்னர்களின் ஆட்சியில் எந்த வரி முக்கியமாகக் கருதப்பட்டது?
3.
படை நிருவாகச் செலவுக்காக வாங்கிய வரியின் பெயர் யாது?
4.
பிடாரி வரி என்பது என்ன?
5.
பாடிகாவல் என்பது எதனைக் குறிக்கிறது?
6.
உடன்கட்டை ஏறும் வழக்கம் நாயக்கர்கள் காலத்தில் இருந்ததா?
7.
நாயக்கர்கள் காலத்தில் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த இரு வைணவ இயக்கங்கள் யாவை?
8.
திருமலை நாயக்கர் காலத்தில் கொண்டாடப்பட்ட இரு திருவிழாக்களைக் கூறுக.
9.
விசயரங்க சொக்கநாத நாயக்கர் எந்தப் புலவரை ஆதரித்தார்?